14 May 2022

Samacheer Kalvi 9th Tamil Unit 4.4

9th Tamil unit 4.4 – விண்ணையும் சாடுவோம் Book Back Questions with Answers:

Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 4.4 – விண்ணையும் சாடுவோம் Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Book – unit 4.4 விண்ணையும் சாடுவோம் Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

9th Tamil Samacheer Kalvi Book Back Answers

Chapter 4.4 – விண்ணையும் சாடுவோம்

கற்பவை கற்றபின்

1. பி.எஸ்.எல்.வி. (PSLV) பற்றியும் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) பற்றியும் செய்திகளைத் திரட்டி விளக்கப் படத்தொகுப்பு உருவாக்குக.
விடை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ ‘ சார்பில், பி.எஸ்.எல்.வி (PSLV)., மற்றும் ஜி.எஸ்.எல்.வி (GSLV)., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

தகவல் தொடர்புக்கு பயன்படும், ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், நேற்று மாலை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.

இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று மாலை, 4:56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.,- எப் 8′ என்ற, ராக்கெட் மூலமாக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, ஆறாவது, ‘கிரயோஜெனிக் இன்ஜின்’ உதவியுடன், விண்ணில் செலுத்தப்பட்ட, ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோள், ஏவப்பட்ட, 17:50 நிமிடங்களில், பூமியில் இருந்து, 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது செலுத்தப்பட்ட ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரகத்தில், 12வது ராக்கெட். ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள். இதில், மொபைல் போன் தகவல் தொடர்புக்கு பயன்படும் சக்தி வாய்ந்த, ‘எஸ் மற்றும் சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:

ஜிசாட் 6 ஏ வெற்றிகரமாக ஏவப்பட்டது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏவப்பட்ட, ‘ஜிசாட் 6′ செயற்கைக்கோளுடன், இதுவும் இணைந்து செயல்பட்டு, தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும். தற்போது செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், இரண்டாம் நிலையில் செல்லும்போது, உந்து சக்தியை அதிகப்படுத்தவும், மின் காந்த அலைகளால் ராக்கெட்டை பாதுகாக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டது. அந்த தொழில்நுட்பங்கள், வெற்றிகரமாக செயல்பட்டன.

இந்த ஆண்டில், 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். குறிப்பாக, ‘சந்திராயன் 2′ செயற்கைக்கோள் உட்பட, பூமி ஆய்வு, அறிவியல், நில அளவிடுதல், தகவல் தொடர்பு, மனிதர்களை விண்ணிற்கு அனுப்புவதற்கான சோதனை உள்ளிட்ட பிரிவுகளில் செயற்கைக்கோள்கள் & விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

2. வகுப்புத் தோழர் ஒருவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து வகுப்பறையில் கற்பனையாக நேர்காணல் ஒன்றை நிகழ்த்துக.
விடை:
கற்பனை நேர்காணல்

வகுப்புத் தோழர் அருண்’ என்பவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து ‘மாலா’ காணும் நேர்காணல்.

மாணவர்களே, நம் வகுப்புத் தோழன் ‘அருண்’ தான் நம் முன் அமர்ந்திருக்கும் அறிவியல் அறிஞர். அவரை நம் சார்பில் “மாலா”வாகிய நான் காணும் இந்த நேர்காணலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்

மாலா : வணக்கம்! திரு. அருண் அவர்களே.
அருண் : வணக்கம்! மாலா மற்றும் உங்களுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்!
மாலா : ஐயா, அறிவியல் அறிஞராகிய உங்களுக்கு என்வாழ்த்துகள் உங்கள் இளமைக்காலம், கல்வி குறித்துக் கூறுங்களேன்.
அருண் : என் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றூராகிய மேலூர். என் பெற்றோர் தினக் கூலியாகத்தான் வேலை செய்தார்கள். நான் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் தான் படித்தேன். பிறகு எனக்கு விருப்பமான பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து புரிந்து பயின்று இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

மாலா : சிறிய வயதில் உங்கள் எதிர்கால நோக்கம் என்னவாக இருந்தது ஐயா!
அருண் : பெரிதாக ஒன்றும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும். பெற்றோர் கஷ்டத்தைத் தீர்க்க வேண்டும் என்பதே.
மாலா : உங்கள் பணியில் ஆரம்ப கால நிகழ்வுகள் பற்றிக் கூறுங்களேன்.
அருண் : பணிக்கு சேர்ந்த புதிதில் சற்று பயத்துடனேதான் ஒவ்வொரு பணியையும்
செய்வேன். ஒரு பணி நிறைவு பெற்ற பின் என் மூத்த அறிவியல் அறிஞரிடம்
பாராட்டு பெற்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கும்.
மாலா : அப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை நினைவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அருண் : ஒரு செயற்கைகோள் ஏவுதளத்தில் எப்படிப்பட்ட மென்பொருள் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஆய்வில் இரவு, பகலாக முயன்று ஒரு செயலியை உருவாக்கி அதனை பயன்படுத்தும் முறையும் உருவாக்கினேன். அப்போது அனைவரது பாராட்டையும் பெற்றதோடு பதவி உயர்வும் பெற்றேன். அது என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணமாய் அமைந்தது.
மாலா : செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தால் நாட்டுக்கு ஏற்படும் பயன்கள் யாவை?

அருண் : ஒவ்வொரு ஆண்டும் பயிர் உற்பத்தி பற்றி கணித்துக் கூறுகிறோம்.
நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு என்பதை செயற்கைக்கோள் மூலம் அறிகிறோம். கடல் பகுதியில் எந்தெந்த இடங்களில் மீன்கள் உள்ளன என்பதை தெரிவிக்கிறோம். திறன் பேசி, தானியங்கி, பணஇயந்திரம் மற்றும் பிற இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள் பயன்படுகின்றன.
மாலா : நீங்கள் மேன்மேலும் சாதனை புரிய வாழ்த்துகள் ஐயா! நன்றி! வணக்கம்!
9th tamil book back questions with answer




பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. விடை வரிசையைத் தேர்க.
அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். ஆ) இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
i) நேவிக், சித்தாரா
ii) நேவிக், வானூர்தி
iii) வானூர்தி, சித்தாரா
iv) சித்தாரா, நேவிக்
விடை:
iv) சித்தாரா, நேவிக்

குறுவினா

1. செயற்கைக் கோள் ஏவு ஊர்தியில் பொருந்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?
விடை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 1982 ஆம் ஆண்டுதான் வேலையில் சேர்ந்தார். திரு. சிவன் 1983 ஆம் ஆண்டு முதல் முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) திட்டத்தை தொடங்க மைய அரசு இசைவு தந்தது.

அங்கு பணிபுரியும் அறிவியலாளர்கள் அனைவருக்குமே இத்திட்டப்பணி புதிதுதான். ஆனால் சிவன் அவர்கள் இரவு பகலாக முயற்சி செய்து ஒரு செயலியை உருவாக்கினார். அது சித்தாரா என்ற ழைக்கப்பட்ட து. (SITARA – Software for Integrated Trafectory Analysis with Real Time Applications)

இது செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய முழுவிவரங்களையும் மின்னியக்க முறையில் (Digital) சேகரிக்கும்.

சிறுவினா

1. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?
விடை:
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு மகத்தானது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக் கணித்து அரசின் கவனத்துக்குத் தெரியப் படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அரசால் அதற்கேற்ற திட்டங்களை வகுத்து மக்களுக்கு பயன்படுத்த முடிகிறது.

நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைச் செயற்கைக்கோள் மூ லம் கண்டுபிடித்ததை மக்களுக்கு பயனுள்ள வழியில் செய்யமுடிகிறது.

கடல் பகுதியில் எந்தெந்த இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்று மீனவர்களுக்குச் சொல்ல பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் பயன்படுத்தும் இணையவழிச் சேவைகளுக்கு செயற்கைக்கோள் இவ்வாறாகப் பயன்படுகிறது.

நெடுவினா

1. இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
விடை:
இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் ‘அன்தரீஷ் பவன்’ என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ்தவன் விண்வெளிமையம். இதன் தலைவராக திரு கே. சிவன், 14.1.2018 அன்று முதல் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், வல்லங் குமாரவிளை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஐ.டி யில் சேர்ந்து எம்.இ., பட்டம் பெற்று விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ‘ஆரியப்பட்டா’ அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.

இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார். 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் ‘ரோகினி’ ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக “சந்திராயன்-1” ஏவப்பட்டது.

1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர், வளர்மதி, மங்கள்யான் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் அருணன் சுப்பையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Other Important Link for 9th Tamil Book Back Solutions:

Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *