05 May 2022

Samacheer Kalvi 9th Social Science Unit 27 in Tamil

9th Social Science Economics Unit 27 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Social New Syllabus 2022 Economics Unit 2 – இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Social Science Economics Book Portion consists of  5 Units. Check Unit-wise and Full Class 9th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Social Science Economics Unit 2 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Social Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check History questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes. Check Samacheer Kalvi 9th Social Science Unit 10 in Tamil below.

அலகு 27: இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Book Back Answers in Tamil

Economics (பொருளியல்) – அலகு 02

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க.

1. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ……………………. வயது வரையிலான வயதை கணக்கிடலாம்.

  1. 12 – 60
  2. 15 – 60
  3. 21 – 65
  4. 5 – 14

விடை : 1. 15 – 60

2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?

  1. முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத்துறை
  2. முதன்மை துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை
  3. சார்புத்துறை, இரண்டாம் துறை, முதன்மை துறை
  4. இரண்டாம் துறை, சார்புத்துறை, முதன்மை துறை

விடை : 1. முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத்துறை

3. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

  1. முதன்மைத் துறை
  2. இரண்டாம் துறை
  3. சார்புத்துறை
  4. பொதுத்துறை

விடை : 1. முதன்மைத் துறை

4. பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?

  1. வேளாண்மை
  2. உற்பத்தி
  3. சுரங்கத்தொழில்
  4. மீன்பிடித்தொழில்

விடை : 2. உற்பத்தி

5. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?

  1. கட்டுமானம்
  2. உற்பத்தி
  3. சிறு தொழில்
  4. காடுகள்

விடை : 4. காடுகள்

6. மூன்றாம் துறையில் அடங்குவது

  1. போக்குவரத்து
  2. காப்பீடு
  3. வங்கியல்
  4. அனைத்தும்

விடை : 4. அனைத்தும்

7. பட்டியல் – I ஐ பட்டியல் – II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தேடு

பட்டியல் – I பட்டியல் – II
அ வேண்ளாண்மை காடுகள், மீன்பிடிப்பு மற்றும் சுரங்கம் 1. ஒழுங்கமைக்கப்படாத துறை
ஆ உற்பத்தி, மின் உற்பத்தி, எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் 2. சார்புத்துறை
இ வாணிபம், போக்குவரத்து மற்றும்
தொலைத்தொடர்பு
3. இரண்டாம் துறை
ஈ குழுமப் பதிவற்ற நிறுவனங்கள் மற்றும் வீட்டுத் தொழில்கள் 4. முதன்மைத் துறை
  1. 1, 2, 3, 4
  2. 4, 3, 2, 1
  3. 2, 3, 1, 4
  4. 3, 2, 4, 1

விடை : 2. 4, 3, 2, 1

8. எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?

  1. முதன்மைத்துறை
  2. இரண்டாம் துறை
  3. சார்புத்துறை
  4. தனியார் துறை

விடை : 4. தனியார் துறை

9. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்கக “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்?

  1. முகமது பின் துக்ளக்
  2. அலாவுதீன் கில்ஜி
  3. ஃபெராேஷ் ஷா துக்ளக்
  4. பால்பன்

விடை : 3. ஃபெராேஷ் ஷா துக்ளக்

10. ……………………… துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

  1. வேளாண்மை
  2. ஒழுங்கமைக்கப்பட்டவை
  3. ஒழுங்கமைக்கப்படாத
  4. தனியார்

விடை : 2. ஒழுங்கமைக்கப்பட்டவை

11. …………………….. துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

  1. பொதுத்துறை
  2. ஒழுங்கமைக்கப்பட்டத் துறை
  3. ஒழுங்கமைக்கப்படாத துறை
  4. தனியார் துறை

விடை : 2. ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

12. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

  1. வங்கியியல்
  2. ரயில்வே
  3. காப்பீடு
  4. சிறு தாெழில்

விடை : 4. சிறு தாெழில்

13. பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தபடுகிறது?

  1. பணியாளர்களின் எண்ணிக்கை
  2. இயற்கை வளங்கள்
  3. நிறுவனங்களின் உரிமை
  4. வேலைவாய்ப்பின் நிலை

விடை : 1. பணியாளர்களின் எண்ணிக்கை

14. கூற்று (A) : ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.
காரணம் (R) : இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.

  1. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
  2. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
  3. (A) சரியானது மற்றும் (R) தவறானது.
  4. (A) தவறானது மற்றும் (R) சரியானது

விடை : 2. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.

15. தொழிலார்களைப் பணியமர்த்துபவர்களாகவும், தங்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாவும் உள்ளவர்கள்

  1. ஊழியர்
  2. முதலாளி
  3. உழைப்பாளி
  4. பாதுகாவலர்

விடை : 2. முதலாளி

16. தமிழ்நாட்டில் …………………. துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

  1. வேளாண்மை
  2. உற்பத்தி
  3. வங்கியல்
  4. சிறுதொழில்

விடை : 1. வேளாண்மை

II. காேடிட்ட இடங்களை நிரப்புக

1. ………………….…………………. துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல.
விடை : ஒழுங்கமைக்கப்படாத

2. பொருளாதார நடவடிக்ககைகள் …………………. மற்றும் …………………. துறைகளாக வகைப்படுத்துகின்றன.
விடை : பாெது மற்றும் தனியார்

3. ………………….…………………. எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு முக்கிய உறுப்பாக இடம் பெற்றுள்ளது.
விடை : வேலை வாய்ப்பு

4. வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் ………………….………………….
விடை : மக்களின் வாழ்க்கை முறை

5. இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை ………………….………………….
விடை : பல பரிமாணங்களைக் காெண்டது

6. ………………….…………………. என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் வேலை செய்யும் திறன் பெற்றவர்களைக் குறிக்கும்.
விடை : ஒரு நாட்டின் பொருளாதாரம்

7. பொதுத்துறை என்பது ………………….…………………. ஆகும்.
விடை : அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள்




III. பொருத்துக

1. பொதுத்துறை வங்கியல்
2. தனியார் துறை கோழி வளர்ப்பு
3. முதன்மைத் துறை இலாப நோக்கம்
4. சார்புத் துறை சேவை நோக்கம
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

1. பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்கதி என்றால் என்ன?
விடை :

  • பொருளியில் செயல்பாடுகளில் மேல்நிலையில் அலுவலர்களாகவும், கீழ்நிலையில் தொழிலாளர்களாவும் இந்த ஊழியர்களைப் பணியமர்த்தி அவர்களின் பணிக்கு ஊதியம் தருவோர் எனவும் தொழிலாளர், மனித சக்தி பயன்படுத்தப்படுகின்றது.
  • விவசாயம் சார்ந்த முதன்மைத் துறையிலும், தொழிற்சாைகள் சார்ந்த இரண்டாம் துறையிலும், சேவைகள் சாரந்த துறையிலும் தொழிலாளர் சக்தி முதன்மை சக்தியாக உள்ளது.

2. குழந்தைகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட வயாேதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாகக் கருதக்கூடாது?
விடை :

  • 15 வயதுக்குத் குறைந்தவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர்.
  • 60 வயதைக் கடந்தவர்கள் உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியானவர்கள் அல்ல என்பதால் இவர்கள் உடல் உழைப்பைச் செய்ய முடியாது.
  • எனவே அவர்களை பணிக்குழுக்களாக கருதக்கூடாது.

3. பாெருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?
விடை :

  1. முதன்மைத்துறை – விவசாயம், கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு
  2. இரண்டாம் துறை – உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம்
  3. சார்புத் துறை -போக்குவரத்து, காப்பீடு, வங்கி

4. மாெத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான சரிவு ஏற்பட்டாலும், தமிழ் நாட்டில் தாெடர்ந்து விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுவதன் காரணத்தைக் கூறுக?

  • தமிழ் நாட்டில் விவசாயமல்லாத துளறகள், உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றிக் கொள்வதற்குப் போதுமான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.
  • எனவே தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பின் வளர்ச்சியின் பெரும்பகுதி குறைந்த வருமானத்தை அளிக்கின்ற அமைப்பு ரீதியாக ஒருங்கமைக்கப்படாத முறைசார துறைகளின் பங்களிப்பாகவே உள்ளது.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

1. விவரி
அ) முதன்மைத் துறை, ஆ) இரண்டாம் துறை, இ) சார்புத் துறை
விடை :
அ) முதன்மைத் துறை
முதன்மைத்துறை விவசாயத்துறை என அழைக்கப்படுகிறது. முதன்மைத் துறைக்கு உதாரணங்கள் விவசாயம், கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால்பண்ணை போன்றவை

ஆ) இரண்டாம் துறை
இரண்டாம் துறை தொழில்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை உதாரணம் ஆகும்

இ) சார்புத் துறை
சார்புத் துறை சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத்தொடர்பு, வீட்டு விற்பனை, அரசு மற்றும் அரசுசார சேவைகள்  போன்றவை உதாரணம் ஆகும்

2. இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பை பற்றி விளக்குக
விடை :

  • இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு ஓராண்டில் சில மாதங்களுக்கே வேலை கிடைக்கும்.
  • முதன்மைத்துறை, இரண்டாம் துறை, சார்புத்துறை என பொருளியில் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொருளியில் அமைப்பின் வெவ்வேறு துறைகளில் ஈடுப்படுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை வேலைப்வாய்ப்பு அமைப்பு குறிக்கிறது. வேலைவாய்ப்பு பாணி நாட்டுக்கு நாடு மாறுகின்ற போதிலும் இந்தியா போனற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலும் சிறிய குழுக்கள் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளன.
  • இந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு இடம் பெற்றுள்ளது

3. ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலைவாய்ப்பை ஒப்பிடுக
விடை :

ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் ஒழுங்கமைக்கப்படாத துறைகள்
1 பதிவு செய்யப்பட்டதும் அரசாங்க விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் பின்பற்றும் ஊழியர்களைக் கொண்டது. விதிகளும், ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை.
2 வங்கிகள், ரயில்வே, காப்பீடு உற்பத்தித் தொழிற்சாலைகள் அரசு ஊழியர்கள் இதில் அடங்குவர் சிறு மற்றும் குடிசைத் தொழில் செய்வோர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை செய்வோர் அடங்கியது.
3. பணிப் பாதுகாப்பு உண்டு பணிப்பாதுகாப்பு இல்லை
4. அதிக ஊதியம் பெறுவர்  குறைந்த ஊதியம் பெறுவர்
5. நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மருத்துவ உதவித் தொகை, காப்பீடு போன்றவை வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, விடுமுறை நாட்கள் மருத்துவ விடுப்பு கிடையாது

4. பொதுத்துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக
விடை :

பொதுத்துறை துறை தனியார் துறை
1. சேவை நோக்கம் கொண்டது இலாப நோக்கம் கொண்டது
2. சொத்துக்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம் சொத்துக்கள் தனி நபர்களுக்குச் சொந்தம்
3. ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகின்றன
4. நாட்டு வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன காடுகள், சுரங்கங்கள் போன்ற இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.
எ.கா. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத் தொலைபேசி நிறுவனம் எ.கா. டி.வி.எஸ் மோட்டர் நிறுவனம், அசோக் லேலண்ட், டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலை

Other Important links for 9th Social Science Book Back Solutions:

Click Here to Download 9th Social Science Book Back Answers – 9th Social Science Book Back Answers

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *