05 May 2022

Samacheer Kalvi 9th Social Science Unit 18 in Tamil

9th Social Science Geography Unit 18 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Social New Syllabus 2022 Geography Unit 7 – நிலவரைபடத் திறன்கள் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Social Science Geography Book Portion consists of  8 Units. Check Unit-wise and Full Class 9th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Social Science Geography Unit 18 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Social Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes. Check Samacheer Kalvi 9th Social Science Unit 18 in Tamil below,

அலகு 18: நிலவரைபடத் திறன்கள் Book Back Answers in Tamil

Geography(புவியியல்) – அலகு 7

நிலவரைபடத் திறன்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க:

1. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது.
அ) தலைப்பு
ஆ) அளவை
இ) திசைகள்
ஈ) நிலவரைப்படக் குறிப்பு
விடை: ஈ) நிலவரைப்படக் குறிப்பு

2. நிலவரைப்படத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்.
அ) முறைக்குறியீடுகள்
ஆ) இணைப்பாய புள்ளிகள்
இ) வலைப்பின்னல் அமைப்பு
ஈ) திசைகள்
விடை: அ) முறைக்குறியீடுகள்

3. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக் கோள்கள்.
அ) 7
ஆ) 24
இ) 32
ஈ) 64
விடை: ஆ) 24

II. பொருத்துக:

1. நிலவரைபடங்களை உருவாக்கும் – அ) அமெரிக்க ஐக்கிய அறிவியல் கலை நாடுகள்
2. புவியின் வடிவம் – ஆ) ஜியாய்டு
3. நவ்ஸ்டார் – இ) நிலவரைபடக் கலையியல்

விடை: 1 – இ , 2 – ஆ  , 3 – அ




III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:

1. கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.
காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கின்றன.
அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி R தவறு
ஈ) A தவறு R சரி
விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.

2. கூற்று (A): ஒரு நிலவரைப்படத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது. காரணம் (R): இது பொதுவாக நிலவரைப்படத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
அ) A தவறு R சரி
ஆ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R ஆனது A விற்கு சரியான விளக்கம்
விடை: அ) A தவறு R சரி

IV. சுருக்கமான விடையளி:

1. நிலைவரைபடம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம்:

  • நிலவரைபடம் ஒரு புவியிலாளரின் அடிப்படைக் கருவியாகும். இது வரைபடங்கள் வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத்தெளிவாகவும் திறப்படவும் விளக்குகிறது.
  • புவியியல் கற்பித்தலில் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைபடங்கள் சொல்லப்படுகின்றன.

2. நிலவரைப்படத்தின் கூறுகள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் கூறுகள்:
தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோடுச்சட்டம் நிலவரைபடக் குறிப்பு, முறைக் குறியீடுகள்.

3. A மற்றும் B ஆகிய இரு நகரத்துக்கு இடையான தூரம் 5கி.மீ. ஆகும். இது நிலவரைப்படத்தில் 5செ.மீ. இடையாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கணக்கிட்டு பிரதி பின்ன முறையில் விடை தருக.
விடை:
நிலவரைபடத்தூரம் = 5 செ.மீ.
புவிபரப்பின் தூரம் = 5 கி.மீ.
1cm=1km ஃ 5cm=5km
ஃஎனவே பிரதி பின்ன முறை = RF = 1:100000

4. நில அளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக
விடை:
சங்கிலி, பட்டகக் காந்தவட்டை, சமதளமேசை, மட்டமானி, அப்ளே மட்டம், சாய்வுமானி, தியோடலைட் மொத்த ஆய்வு நிலையம், உலகலாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை.

5. தொலை நுண்ணுணர்வு – வரையறு?
விடை:

  • தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
  • தொலை என்பது தூரத்தையும் நுண்ணுணர்தல்’ என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.

6. தொலை நுண்ணுணர்வின் கூறுகள் யாவை?
விடை:
தொலை நுண்ணுணர்வின் கூறுகள்

  • ஆற்றல் மூலம்
  • இலக்கு
  • அனுப்பும் வழி
  • உணர்விகள்

V. காரணம் கூறுக:

1. நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள் பதிமங்கள் துணைபுரிகின்றன.
விடை:
ஏனெனில்,

  • செயற்கைக் கோள் பதிமங்கள் செயற்கைக் கோள்களின் எண்ணிம தோற்றுரு செய்யப்பட்ட படங்களை (digitally transmitted images) குறிப்பிடுகிறது. புவியின் தன்மைகள், விவரங்கள், மாறுதல்கள் பற்றி அறிய வான்வெளி செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்படும் படங்கள்.
  • மிகக்குறுகிய காலத்தில் முழுப்பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரிக்கலாம். எளிதாக பட மேம்பாட்டிற்கான மென்பொருள்களுடன் ஒருங்கிணைக்கப்படலாம். செயற்கைக்கோள் பதிமங்கள் பயன்பாடு 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் நிலவரைபட உருவாக்கத்தை மேலும் ஊக்குவித்தனர்.

2. புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலவரைப்படம்.
விடை:
ஏனெனில்,
நிலவரைப்படம் வரைபடங்கள், வார்த்தைகள், குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத் தெளிவாகவும், திறம்படவும் விளக்குகிறது. புவியியல் கற்பித்தல் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைப்படங்கள் அமைகின்றன.

3. நிலவரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்பு பயன்படுகிறது.
விடை:
ஏனெனில்,

  • நிலபரைப்படத்தில் ஓர் இடத்தின் அமைவிடம் அதன் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு மூலம் வரையறுக்கப்படுகிறது. படத்தில் ஒரு கட்டம் என்பது ஓரிடத்தின் அமைவிடத்தைக் காட்ட உதவும் எண்ணெழுத்துக் குறியீடுகள் கொண்ட வரிசைகளின் அமைப்பாகும்.
  • படத்தில் இடவலமான கிடைமட்டக் கோடுகள் வடக்கைக் கோடுகள் (Northing) என்றும், மேல்கீழ் செங்குத்துக் கோடுகள் கிழக்கைக் கோடுகள் (Easting) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோடுகள் வெட்டும் புள்ளிகள் இணைப்பாயப் புள்ளிகள் ஆகும்.
  • வலைப்பின்னல் (Grid) என்பது தல வரைபடத்தில் பல கோடுகள் இணைந்து ஓர் இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாகக் காட்டும் நுட்பம் ஆகும்.

Other Important links for 9th Social Science Book Back Solutions:

Click Here to Download 9th Social Science Book Back Answers – 9th Social Science Book Back Answers

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *