06 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 7 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 7 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 7 – வெப்பம் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 7 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 07: வெப்பம் Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 07 – வெப்பம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கலோரி என்பது எதனுடைய அலகு?

அ) வெப்பம்
ஆ) வேலை
இ) வெப்பநிலை
ஈ) உணவு
விடை :
அ) வெப்பம்

2. வெப்பநிலையின் SI அலகு

அ) ஃபாரன்ஹீ ட்
ஆ) ஜூல்
இ) செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை :
இ) கெல்வின்

3. ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2 :1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?

அ) இரண்டும்
ஆ) கம்பி – 2
இ கம்பி – 1
ஈ) எதுவும் இல்லை
விடை :
இ) கம்பி -1

4. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?

அ) வெப்பக்கதிர்வீச்சு
ஆ) வெப்பக்கடத்தல்
இ வெப்பச்சலனம்
ஈ) ஆ மற்றும் இ
விடை :
ஆ) வெப்பக்கடத்தல்

5. வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.

அ) சூரிய மின்கலம்
ஆ) சூரிய அழுத்த சமையற்கலன்
இ) வெப்பநிலைமானி
ஈ) வெற்றிடக் குடுவை
விடை :
இ) வெற்றிடக் குடுவை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை …………………………….
விடை :
வெப்பக்கதிர்வீசல்

2. பகல் நேரங்களில், காற்று ……………………………. லிருந்து ……………………………. க்கு பாயும்
விடை :
கடல், நிலம்

3. திரவங்களும், வாயுக்களும் ……………………………. முறையில் வெப்பத்தைக் கடத்தும்
விடை :
குறைவான

4. வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ……………………………. மாறுவதை என்கிறோம்.
விடை :
உள்ளுறை வெப்பம்





III. கருத்து மற்றும் காரணம் வகைக் கேள்விகள்:

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :
அ. கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி, காரணம் தவறு.
ஈ. கருத்து தவறு, காரணம் சரி.

1. கருத்து : தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.
காரணம்:  தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.
விடை :
(அ) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

2. கருத்து : மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
காரணம்: சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.
விடை :
(ஆ) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.

3. கருத்து : வெப்பநிலை 100°C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம் : நீரின் கொதிநிலை 10°C
விடை :
(இ) கருத்து சரி, காரணம் தவறு

IV. சுருக்கமாக விடையளி.

1. வெப்பக் கடத்தல் – வரையறு.
விடை :

  • அதிக வெப்பநிலை உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு.

2. பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுவது ஏன்?
விடை :

  • இரட்டைச் சுவர்களுக்கிடையே உள்ள இடைவெளியில் வெற்றிடம் உள்ளது.
  • வெற்றிடம் வெப்பத்தைக் கடத்தாது.
  • வெற்றிடம் வெளியே உள்ள வெப்பத்தை உட்புறம் கடத்துவதில்லை.
  • எனவே பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலனில் வைக்கப்படுகிறது.

3. மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் எப்போதும் குளிராக இருப்பது ஏன்?
விடை :

  • மண்பானையில் உள்ள நுண்துளைகள் வழியே கசியும் நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கும்.
  • ஆவியாதல் மூலம் வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் உள்ள நீர் குளிர்ச்சியாக இருக்கும்.

4. வெப்பச்சலனம் – வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.
விடை :

9th science book back questions with answer in tamil

5. கோடைக்காலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?
விடை :

  • வெள்ளை நிற ஆடைகள் வெப்ப பிரதிபலிப்பான்கள்.
  • வெப்பத்தை உள்ளே அனுமதிக்காது.
  • எனவே கோடைக்காலங்களில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

6. தன் வெப்ப ஏற்புத் திறன் – வரையறு.
விடை :

  • ஓரலகு நிறையுள்ள (1kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு 1°C அல்லது K உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல்.
  • SI அலகு : Jkg-1k-1

7. வெப்ப ஏற்புத் திறன் – வரையறு.
விடை :

  • ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல்.
  • SI அலகு J/KT

8. உருகுதலின் உள்ளுறை வெப்பம் – வரையறு.
விடை :

  • உருகுதல் நிகழ்வின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பம் உறைதல் நிகழ்வின் போது வெப்பநிலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் வெளிவிடப்படும்.
  • இந்த வெப்பம் உருகுதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




2 thoughts on “Samacheer Kalvi 9th Science Unit 7 in Tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *