06 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 3 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 3 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 3 – பாய்மங்கள் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 3 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 03: பாய்மங்கள் Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 03 – பாய்மங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு
அ) குறையும்
ஆ) அதிகரிக்கும்
இ) அதே அளவில் இருக்கும்
ஈ) குறையும் அல்லது அதிகரிக்கும்

2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த ____காரணமாகும்.
அ) அடர்த்தி
ஆ) அழுத்தம்
இ) திசைவேகம்
ஈ) நிறை

3. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக்
காரணம், அதனுடைய
அ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.
ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
இ) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
ஈ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.

4. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப் படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது.
இதற்கான காரணம் என்ன?
அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
ஈ) மேலே கூறிய யாவும்.

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட _____________ ஆகத் தோன்றும்.
2. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _____________ ஆகும்.
3. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு
திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.
4. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் _____________ மூலம் வேலை செய்கிறது.
விடை:

  1. குறைவாகத்
  2. காற்றழுத்தமானி
  3. அடர்த்தியை
  4. அழுத்தம்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது.
விடை: சரி

2. ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
விடை: தவறு

3. மிக உயரமாள கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.
விடை: தவறு

4. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
விடை: சரி

5. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.
விடை: சரி





IV. பொருத்துக

  1. அடர்த்தி                                 (a) hρg
  2. 1 கிராம் எடை                     (b) பால்
  3. பாஸ்கல் விதி                     (c) நிறை/ பருமன்
  4. பாய்மம் ஏற்படுத்தும்  (d) அழுத்தம்
  5. பால்மானி                             (e) 980 டைன்

விடை: 1 – c; 2 – e; 3 – d; 4 – a; 5 – b

V. சுருக்கமாக விடையளி.

1. திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் எந்தெந்த காரணிகளைப் பொறுத்தது?
விடை:
திரவங்களில் ஏற்படும் அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

  • ஆழம் (h)
  • திரவத்தின் அடர்த்தி (p)
  • புவியீர்ப்பு முடுக்கம் (g)

2. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?

விடை:

  • காற்றைவிட ஹீலியம் அடர்த்தி குறைவு.
  • எனவே ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதக்கிறது.

3. ஆற்று நீரில் நீந்துவது கடல் நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?
விடை:

  • உப்பின் காரணத்தால் கடல் நீரின் அடர்த்தி, ஆற்று நீரின் அடர்த்தியை விட அதிகம்,
  • கடல் நீரின் அதிகமான மிதப்பு விசையால் நீந்துபவரின் உடல் குறைவாகவே கடல் நீரில் மூழ்குகிறது. எனவே, கடல் நீரில் நீந்துவது எளிது.

4. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன?
விடை:

  • குறிப்பிட்ட உயரம் வரை (ஏறத்தாழ 300 கி.மீ) காற்றால் சூழப்பட்ட பூமியானது, வளிமண்டலம் ஆகும்.
  • காற்றிற்கு எடை உள்ளது. எனவே இடத்தை அடைத்துக்கொள்ளும். மேலும் காற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
  • வளிமண்டல அழுத்தம் என்று குறிப்பிடும்போது கடல் மட்டத்தில் உள்ள அழுத்தத்தை குறிப்பிடுகிறோம்.

5. பாஸ்கல் விதியைக் கூறு.
விடை:
அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அனைத்துத் திசைகளிலும் சீராக கடத்தப்படும்.

VI. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.

சரியானதைத் தேர்ந்தெடு.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.

1. கூற்று: ஒரு பொருள் மதிப்பதற்கு, தனது எடைக்குச் சமமான எடையுள்ள நீரை வெளியேற்ற வேண்டும்.
காரணம்: அப்பொருள் எந்தவொரு கீழ்நோக்கிய விசையையும் உணர்வதில்லை.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

2. கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *