07 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 20 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 20 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 20 – விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 20 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Biology questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 20: விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 20 – விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்

2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்

3. மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ணம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்

4. பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்

5. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்

6. கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்

7. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி

8. கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:
பைலோரஸ்

2. உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:
நாக்கு

3. கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை

4. உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:
சிறுகுடல்

5. மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:
37°C

6. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:
கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை: – தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

2. செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை: – சரி

3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை: – சரி





IV. பொருத்துக.

உறுப்பு நீக்குதல்
1.        தோல் அ) சிறுநீர்
2.        நுரையீரல்கள் ஆ) வியர்வை
3.        பெருங்குடல் இ) கார்பன் டை ஆக்ஸைடு
4.        சிறுநீரகங்கள் ஈ) செரிக்காத உணவு

விடை: – 1 – ஆ; 2 – இ; 3 – ஈ; 4 – அ

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.

அ. கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்

9th science book back questions with answer in tamil

ஆ. உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்

9th science book back questions with answer in tamil

இ. உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்

9th science book back questions with answer in tamil

ஈ. இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை

உ. வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

9th science book back questions with answer in tamil

VI. சுருக்கமான விடையளி

1. செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
விடை:

  1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன.
  2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
  3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
  4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.

2. நமக்கு ஏன் வியர்க்கிறது?
விடை:

  1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
  2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.

3. மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
  2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

4. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

5. முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
விடை:
9th science book back questions with answer in tamil

6. நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
விடை:

  1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
  2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் வெளிசெல் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
  3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
  4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
  5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
    9th Science book back questions with answer in tamil

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *