19 May 2022

Samacheer Kalvi 8th Tamil Unit 4.2 Book Back Answers

8th Tamil unit 4.2 – புத்தியைத் தீட்டு Book Back Questions with Answers:

Samacheer Kalvi 8th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 8 New Tamil Book Back Answers Unit 4.2 – புத்தியைத் தீட்டு Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 8th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Tamil guide Book Back Answers PDF. See below for the New 8th Tamil Book Back Questions with Answer PDF:




8th Samacheer Kalvi Book – unit 4.2 புத்தியைத் தீட்டு Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 8th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

8th Tamil Samacheer Kalvi Book Back Answers

Chapter 4.2 – புத்தியைத் தீட்டு

கற்பவை கற்றபின்

1. அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.
விடை:
(i), அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
(ii) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(iii) அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
(iv) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
(v) அற்ப அறிவு அல்லற் கிடம்.




மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………. இன்றி வாழ்ந்தார்.
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம்
இ) வருத்தம்
ஈ) வெகுளி

2. ‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ), கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்

குறுவினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
விடை:
பிறரை மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.

2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
விடை:
பகைவர்களிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சிறுவினா

1. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
விடை:
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகள் :
(i) கத்தியைக் கூர்மையாக்குவதைத் தவிர்த்து விட்டு அறிவைச் கூர்மையாக்க வேண்டும்.

(ii) கோபம் நம் கண்ணை மறைத்துவிடும். அப்போது அறிவுடன் செயல்பட்டு சரியான முடிவெடுக்க வேண்டும்.

(iii) நம்மை அழிக்க நினைக்கும் பகைவர்களிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

(iv) பிறருடைய குறைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களின் உள்ளம் மாணிக்கக் கோயிலைப் போன்றது. இதை மறந்தவர்களின் வாழ்வு அடையாளம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

(v) நாம் செருக்கின்றி வாழ வேண்டும். செருக்குடன் வாழ்வதால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்பதை எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு தெளிவாகும். இவையே புத்தியைத் தீட்டி வாழவேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவனவாகும்.

சிந்தனை வினா

1. உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
விடை:
(i) என் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் நான் என் பொறுமையால் அவரை வெல்வேன்.
(ii) அன்போடு பழகுவேன்.
(iii) வெறுப்பதற்கான காரணம் அறிந்து அதைச் சரி செய்வேன்.
(iv) அவருடைய மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவேன்.
(v) விட்டுக் கொடுத்துப் பழகும் என்னுடைய செயல்பாட்டை அறிந்து அவர் தன்னை மாற்றிக் கொள்ளும்படிச் செய்வேன்.

Other Important links for 8th Tamil Book Back Solutions:

Click here to download the complete Samacheer Kalvi 8th Tamil Book Back Answers – 8th Tamil Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *