27 May 2022

Samacheer kalvi 6th Science Term 1 Unit 5 Answers in Tamil

Samacheer Kalvi 6th Science Term 1 Unit 5 Book Back Questions and Answers:

Samacheer Kalvi 6th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Science Term 1 book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 5 – விலங்குலகம் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Science Term 1 Unit 5 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Science பருவம் 1 அலகு 5 – விலங்குலகம் Book Back Questions with Answer PDF:

For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 6th Science Book Back Chapter 5 Term 1 Solution Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 1

அலகு 5 – விலங்குலகம்

I. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்க்கண்டவற்றை நிரப்புக:

1. நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ……. என்று அழைக்கலாம்.
விடை: வாழிடம்

2. செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை மற்றும்……… என வகைப்படுத்தலாம்.
விடை: ஒரு செல் மற்றும் பல செல் உயிரினம்

3. பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ……… பறக்கும் திசையை உதவுகிறது.
விடை: கட்டுப்படுத்த

4. அமீபா உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது,
விடை: பொய்க்கால்கள்

II. சரியா அல்லது தவறா? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக:

1. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
விடை: சரி

2. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
விடை: தவறு – புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.

3. ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
விடை: சரி

4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
விடை: சரி

5. பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.
விடை: தவறு – பார்மீசியம் ஒரு ஒருசெல் உயிரி .

III. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. வெப்பமண்டல மழைக் காடுகள். புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை …… என்று அழைக்கிறோம்.
விடை: வாழிடம்

2. ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை: ஒரு செல் உயிரினம்

3. மீனின் சுவாச உறுப்பு ………… ஆகும்
விடை: செவுள்கள்

4. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ………
விடை: நடக்கின்றன

5. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ……… சேமிக்கின்றன.
விடை: கொழுப்பு




IV. குறு வினாக்கள்

1. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிழக்கின்றன?
விடை:
பறவைகளின் உணவு பிடிக்கும் விதம் அதன் இனத்தை பொறுத்தது.

  • நீரில் வாழும் பறவைகள் தலைகீழாகப் பாய்ந்து அதன் அலகு மூலம் நீரில் உள்ள மீன்களைப் பிடிக்கிறது.
  • வயல்வெளிகளில் வாழும் பறவைகள், புல் மற்றும் வயல்களில் பறக்கும் சிறிய பூச்சிகளை தன் அலகு மூலம் பிடிக்கிறது.
  • வானத்தில் பறக்கும் பறவைகள் தரையில் உள்ள விலங்குகளை அதனுடைய காலிலுள்ள கூர்மையான நகங்கள் மூலம் பிடிக்கிறது.

2. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்
விடை:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களைக் காணலாம்
ஒட்டகம் வாழும் இடங்கள்

  • ஜோத்பூர்
  • பஸ்கர்
  • பிக்கானர்
  • ஜாஸ்சால்மர்

3. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
விடை:
அமீபா இடப்பெயர்ச்சியின் போது விரல் போன்ற போலி கால்களை உருவாக்குகிறது. இக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

4. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
விடை:
பாம்பின் உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். அவை தலை, உடல், வால். தலையில் உள்ள உறுப்புகள் – இருகண்கள், இரு நாசித்துளைகள், வாய்.

5. பறவைகள் காற்றில் பறக்கும் போது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன.
விடை:
பறவைகள் பறக்கும் போது அதன் வாலைப் பயன்படுத்தி திசையை மாற்றிக் கொள்கிறது.

V. சிறு வினாக்கள்

1. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக்
விடை:
Samacheer kalvi 6th Science Term 1 Unit 3 Answers in Tamil

2. துருவக் கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.
விடை:
துருவக்கரடிகள் :

  1. குட்டையான கால்களைப் பெற்றுள்ளது.
  2. வெப்பத்தை குறைப்பதற்கு குறைந்த உடல் பரப்பை பெற்றுள்ளது.
  3. தடித்த தோலைப் பெற்றுள்ளது.
  4. உடல் முழுவதும் மென்மையான அதிகமான ரோமங்களை பெற்றுள்ளது.
  5. தோலுக்கடியில் தடித்த கொழுப்பு திட்டுகளை பெற்றுள்ளது.
  6. கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவையே உண்ணுகிறது.

பென்குயின் :

  1. படகு போன்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது.
  2. இதன் இறகுகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது.
  3. கடினமான தோலை பெற்றுள்ளது.
  4. இதன் அடித்தோல் அதிக கொழுப்பு திட்டுகளைக் கொண்டது.
  5. இது நீருக்குள் பறப்பதற்கு குட்டையான இறகுகளை (துடுப்புகள்) பெற்றுள்ளது.

3. பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?
விடை:

  1. பறவைகளின் படகு போன்ற உடலமைப்பு.
  2. பறவைகளின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறுபாடு அடைந்திருத்தல்.
  3. உள்ளீடற்ற, வெற்றிடத்தினால் ஆன இலேசான எலும்புகளைப் பெற்றிருத்தல்.
  4. பறவைகளின் உடல் இறகுகளால் மூடப்பட்டிருத்தல்.

4. முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
விடை:

  1. புரோட்டோசோவா (ஓரு செல் உயிரிகள்)
  2. பொரிஃபெரா (துளையுடலிகள்)
  3. சீலென்டிரேட்டா (குழியுடலிகள்)
  4. பிளாட்டிஹெல்மின்திஸ் (தட்டைபுழு இனம்)
  5. நிமட்டோடா (உருளைப்புழு இனம்)
  6. ஆர்த்ரோபோடா (கணுக்காலிகள்)
  7. மொலஸ்கா (மெல்லுடலிகள்)
  8. எக்கினோ டெர்மேட்டா (முட்தொலிகள்)

VI. விரிவான விடையளி

1. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
விடை:

  1. பாலைவனத்தில் சூடான மணலிருந்து தனது உடலை பாதுகாக்க நீண்ட கால்களைப் பெற்றுள்ளது.
  2. நீர் கிடைக்கும் போது அதிக நீரை அருந்தி தன் உடலில் நீரை சேர்த்து வைக்கிறது.
  3. தன் உடலில் உள்ள நீர் இழப்பை குறைக்க குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை வெளியேற்றுவதில்லை.
  4. அதன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் போது கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகிறது.
  5. பாலைவன மிருதுவான மணலில் நடக்க பெரிய தட்டையான திண்டுகால்களைப் பெற்றுள்ளது.
  6. நீண்ட கண் இமைகள் மற்றும் நீண்ட தோல் கண்கள் மற்றும் காதுகளை புழுதிப்புயலிலிருந்து பாதுகாக்கிறது.
  7. நாசி துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுக்க மூடிய நிலையில் உள்ளது.

Other Important links for Class 6th Book Back Answers:

Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF

For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *