30 May 2022

Samacheer Kalvi 6th Civics Term 2 Unit 1 Answers in Tamil

Samacheer Kalvi 6th Civics Term 2 Unit 1 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 2 அலகு 1 – தேசியச் சின்னங்கள் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science Civics Book Back Unit 1 Term 2 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 6th Social Civics Book Back Unit 1 Term 2 Answers/Solutions Guide PDF:

Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 2

குடிமையில் – அலகு 1 – தேசியச் சின்னங்கள்

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

1. தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி

2. இந்தியாவின் தேசிய கீதம். ……….
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த

3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு

4. …………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு

5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை

6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா

7. தேசிய கீதத்தை இயற்றியவர் …………..
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்

8. தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்

9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு

10. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை: சாரநாத்

2. இந்தியாவின் தேசியக் கனி …………….
விடை: மாம்பழம்

3. இந்தியாவின் தேசியப் பறவை …………
விடை: மயில்

4. இந்தியாவில் தேசிய மரம் ………..
விடை: ஆலமரம்

5. 1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை: குடியாத்தம்

6. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………
விடை: பிங்காலி வெங்கையா

7. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..
விடை: கனிஷ்கர்

8. இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..
விடை: கங்கை

9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………
விடை: டி. உதயகுமார்

10. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.
விடை: 24

III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

1. நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
விடை: சாரநாத்

2. தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)
விடை: 1950

3. ……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
விடை: லாக்டோபேசில்லஸ்

IV. நிரப்புக.

1. காவி – தைரியம்; வெள்ளை – ……………
விடை: நேர்மை

2. குதிரை – ஆற்றல்; காளை – ……………….
விடை: கடின உழைப்பு

3. 1947 – விடுதலை நாள்; 1950 – ……….
விடை: குடியரசு நாள்




V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்

1. ரவீந்திரநாத் தாகூர் அ. தேசியப்பாடல்
2. பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆ. தேசியக்கொடி
3. பிங்காலி வெங்கையா இ. வான் இயற்பியலாளர்
4. மேக்னாத் சாகா ஈ. தேசிய கீதம்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?

Samacheer kalvi 6th Social Science Term 2 Unit 1 Answers in Tamil

விடை: 1. ராஜநாகம் 2. டால்பின் 3. லாக்டோ பேசில்லஸ்

VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

1. அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது
இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை:
இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.

2. அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.

VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விடை:
1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

IX. விடையளிக்கவும்.

1. தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
விடை:

  • காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
  • பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
  • வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
  • கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

2. தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
விடை:

  • மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.

3. தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
விடை:

  • ஜன கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
  • ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

4. இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
விடை:

  • இந்திய ரூபாய்க் குறியீடு என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணக்குறியீடு ஆகும். (வடிவமைத்தவர் டி. உதயகுமார்)
  • இந்த வடிவமைப்பு இந்திய அரசால் 15 ஜூலை 2010-ல் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
    6th social science book back questions with answer

5. தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

6. தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?
விடை:
தேசிய உறுதி மொழியை எழுதியவர் பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.

7. தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
விடை:
யானை, குதிரை, காளை மற்றும் சிங்கம்

8. இயற்கை தேசிய சின்னங்கள் எவை?
விடை:

  • ஆலமரம் – மயில்
  • கங்கை ஆறு
  • ஆற்று ஓங்கில்
  • ராஜநாகம்
  • தாமரை
  • புலி
  • யானை
  • லாக்டோபேசில்லஸ்
  • மாம்பழம்

9. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விடை:
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

Other Important links for 6th Social Science Answers in Tamil:

Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *