14 Apr 2022

Samacheer Kalvi 10th Tamil Unit 6.4 Book Back

10th Tamil Unit 6.4 – கம்பராமாயணம் Book Back Answers:

Samacheer Kalvi 10th Standard Tamil Book Back Questions with Answers PDF uploaded and the same given below. Class-tenth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 10th Std Tamil Book Back Questions & Answers இயல் Unit 6.4 – கம்பராமாயணம் Solutions are given below. Check the complete Samacheer Kalvi 10th Tamil இயல் Unit 6.4 Answers below:

We also provide class 10th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 10th standard Tamil Unit 6 Book Back Questions with Answer PDF:

For the complete Samacheer Kalvi 10th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers Guide




10th Tamil Book Back Answers Unit 6.4 – கம்பராமாயணம் Solution PDF:

Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

For Samacheer Kalvi 10th Tamil Book PDF, check the link – 10th Tamil Book PDF

Chapter 6.4 – கம்பராமாயணம்

கற்பவை கற்றபின்

1.கம்பராமாயணக் கதைமாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து வகுப்பில் உரையாற்றுக.
விடை:

கதைமாந்தர் :குகன்

தன் மனைவி சீதையுடனும், தம்பி இலக்குவனுடனும் இராமன் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் கங்கைக் கரையை அடைந்தான். அங்கே அன்பே வடிவான வேட்டுவத்தலைவன் குகன் இராமனைச் சந்தித்தான்.

போர்க்குணமிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்; கங்கையாற்றுத் தோணித் துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்; பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்; மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்; துடி என்னும் பறையை உடையவன்; வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன்; தோல் செருப்பு அணிந்த பெருங்கால்களை உடையவன் ; கரிய நிறத்தவன். கரிய மேகக் கூட்டம் திரண்டு வந்தாற்போல் மிகுதியான படைபலம் உடையவன்.

இத்தகைய குகன் கங்கைக் கரையின் பக்கத்திலுள்ள சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழ்பவன். அவன் முனிவர் தவச்சாலையில் உள்ள இராமனைக் காண தேனும் மீனும் கொண்டு சென்றான் (அரசன், குரு, தெய்வம் ஆகியோரைக் காணச் செல்லும் போது வெறுங்கையோடு செல்லலாகாது என்பது தமிழ் மரபு).

இராமனைக் கண்டதும் இருள் போன்ற நீண்ட முடியுடைய தலை மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான். பின், எழுந்து வாயை கையால் பொத்தி, உடலை வளைத்து அடக்கமாய் நின்றான். இராமன் அவனை தன் அருகில் அமருமாறு கூறியும் மரியாதை நிமித்தமாக அவன் அமரவில்லை .

குகனின் அன்பு மற்றும் மரியாதையைக் கண்ட இராமன் குகனிடம், உள்ளத்து அன்பு முதிர்வினால் நீ கொண்டு வந்த இந்தப் பொருட்கள் எத்தன்மையதாய் இருந்தாலும் அமுதத்தைவிட சிறந்தனவே. அன்பு கலந்ததனால் தூயனவே. நான் இதை ஏற்றுக் கொண்டதே விரும்பி உண்டதற்குச் சமம் என்றான்.

மேலும் குகனிடம், முன்னர் நாங்கள் உடன்பிறந்தோர் நால்வராய் இருந்தோம் ; விரிந்த அன்பினால் உன்னோடு ஐவரானோம் என்றான் இராமன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
விடை:
ஈ) அங்கு வறுமை இல்லாததால்

குறுவினா

1.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
விடை:

  • ‘கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய்’ என்று சொல்லி எழுப்பினார்கள்.
  • வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.




சிறுவினா

1.‘கடற்கரையில் உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதியில் மலைப்பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன’ – காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
விடை:

10th Samacheer Kalvi Tamil Book Back Solutions

நெடுவினா

1.சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொகுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…

இவ்வுரையைத் தொடர்க.
விடை:
“தண்டலை மயில்களாட தாமரை விளக்கத் தாங்கக்,
கொண்டல் கண் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம் வீற்றி ருக்கும்மாதோ.”

தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,
சோலையை நாட்டிய மேடையாகவும்
மயிலை நடன மாதராகவும்
குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்
தாமரை மலரை விளக்காகவும்
மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்
வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்
பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து
தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.

இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்துப் பார்த்தால் கம்பன் தமிழுக்குக் கிடைத்த வரம் எனலாம்.

படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகின்றான்.

“காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும் சாகாது
கம்பனவன் பாட்டு, அது
தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”

எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.

கம்பன் கவிகளை எழுதுவதற்கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசித்ததை அனுபவித்து, அதனுள் கரைந்து விடாமல் படிக்கும் வாசகனை உள்ளே இழுத்து வருகிறான். தன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓசை நயத்தை உருவாக்குகிறான். தம்மை உச்சிக்குக் கொண்டு சேர்க்கிறான்.

உதாரணமாக,
தாடகை என்ற அரக்கியைக் கம்பர் உருவாக்குகிறார்.
“இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்
பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயள
மறக்கடை அரக்கி” – என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.

கம்பனின் கவிதை மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ அதில் ஒன்று சந்தம். ஓசை தரும் இன்பம் ஒரு கோடி இன்பம் என்பதற்கு ஏற்ப,
கம்பர் கங்கை காண் படலத்தில்,

”ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை……..”

எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கம்பர் கண்முன் எழுப்புகிறார்.

“உறங்குகின்ற கும்பகன்ன! வுங்கண் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!”

மேற்சொன்ன கவிதைகளை உற்று நோக்கும்போது சந்தக் கவிதையில் சிறகடித்துப் பறக்கும் தமிழ் நெடிய உலகில் கம்பனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறியமுடிகிறது.

Other Important Links for 10th Tamil Book Back Answers solutions:

Click here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – 10th Tamil Book Back Answers

Click here to download the 10th Book Back Answers Guide for all subjects – Samacheer Kalvi 10th Book Back Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *